Designed by Iniyas LTD
நேபாளில் விமான விபத்தில் 23 பேர் பலி!
சிறிய ரக விமானமொன்று நேபாளத்தில் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 23 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அசாதாரண காலநிலை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 18 பயணிகள் உள்ளிட்ட விமான பணியாளர்களுடன் பொகாராவிலிருந்து பயணித்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.