தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகளிர் தினம் அன்று பொதுவிடுமுறை

மகளிர் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கிராம நிர்வாக அலுவலர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  vo

திண்டுக்கல் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக, பெண்கள் தினத்தை முன்னிட்டு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்போது, சீனா, ரஷ்யா, வியட்நாம் நாடுகளைப் போன்று இந்தியாவில் மகளிர் தினத்தை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும், பெண்கள் பணிபுரியும் அனைத்து இடங்களிலும் கழிப்பறை கட்டித்தர வேண்டும், விசாகா கமிட்டியை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்டத் தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

Comments
Loading...