Designed by Iniyas LTD
நிரந்தர நியமனம் வேண்டும் – சுகாதரா தொண்டர்கள் ஆர்ப்பாட்டம்
நிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள். விரைவில் எங்களுக்கு நிரந்தர நியமனம் கிடைக்கும் வரை உண்ணாவிரதத்தை தொடரவுள்ளதாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களும் தெரிவித்தனர்.
நிரந்தர நியமனம் வழங்க வேண்டும் எனக்கோரி பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண சுகாதாரத் திணைக்கள அலுவலகம் முன்பாக இன்று தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் 34 சுகாதாரத் தொண்டர்களுடன் கிராமிய சுகாதார உதவியாளர்கள் 22பேர், மாநகர சபை சுகாதார தொண்டர்கள் 28 பேரும் இணைந்து இந்த உண்ணாவிரத போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என எங்களை ஏமாற்றிக் கொண்டு இருக்காது உடனடியாக எமக்கான நிரந்தர நியமனம் கிடைக்க வேண்டும். இல்லையேல் உண்ணாவிரதத்தை தொடருவோம் என அவர்கள் தெரிவித்தனர்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=k5i5quZB5hM” width=”560″ height=”315″]