Designed by Iniyas LTD
இன்று உலக நீர் தினமாகும்!
உலக நீர் தினம் இன்றாகும். நீர் சார்ந்த பிரச்சினைகள் குறித்து மேலதிக கற்றலை மேற்கொள்வதற்கான வாய்ப்பாகவும் அவை குறித்து ஏனையவர்களுக்கு எடுத்துரைத்து மாற்றத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பதைத் தூண்டும் வகையில் இந்த தினம் கொண்டாப்படுகின்றது.
தொடர்புடைய பதிவு
1992 ஆம் ஆண்டு சூழல் மற்றும் அபிவிருத்தி தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் மாநாட்டில் உலக நீர் தினம் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இதன்பிரகாரம் 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் முதலாவது உலக நீர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது.
அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக நீர் தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகில் 1.5 மில்லியன் மக்கள் நீர் சார்ந்த தொழில்துறைகளில் பணியாற்றிவருகின்றனர்.