Designed by Iniyas LTD
ஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தை பகிர்ந்தாலும் எதிர்ப்போம்! ஜே.வி.பி
ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரத்தை பகிர்வதனால் பிரச்சினைகள் தீக்கப்படப்போவதில்லை என்று தெரிவித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி அதிகாரத்தை பகிர்வதை தமது கட்சி எதிர்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. அக் கட்சியின் பொதுச்செயலாளர் ரிவின் சில்வா கொழும்பு ஊடம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
1987இல் நாட்டில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட்டுள்ளமையால் வடக்கு மக்களுக்கோ, ஏனைய மாகாண மக்களுக்கோ எந்த விதமான பயனும் கிடைக்கவில்லை என்பது அனுபவம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிகாரப் பகிர்வால் வடக்கு மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்பது வேடிக்கை என்றும் ரிவின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மக்கள் சுதந்திரமாக அரசியல் பிரச்சினைகள் இல்லாமல் வாழும் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே அவர்களது தேவை என்று குறிப்பிட்ட அவர் யுத்தம் முடிந்து பல வருடங்கள் ஆகியும் வடக்கு மக்களின் வாழ்வில் சுபீட்சம் கிடைக்கவில்லை என்றும் வடக்கு மாத்திரமின்றி ஏனைய பகுதி மக்களுக்கும் சுபீட்சமும் சமத்துவமும் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சமஷ்டி ஆட்சிக்கு இடமில்லை என்று அரசாங்கம் கூறிக்கொண்டு ஒற்றை ஆட்சிக்குள் அதிகாரத்தை பகிர முனைவதாகவும் எப்படியானபோதும் அதிகாரப் பகிர்வை தமது கட்சி எதிர்க்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
