Designed by Iniyas LTD
கேரளா சட்டசபையில் அதிமுக வெல்ல வாய்ப்பு
கேரளா சட்டசபை தேர்தலில் 3 அல்லது 4 சட்டசபை உறுப்பினர்களாவது வெற்றி பெற்று அவைக்கு அனுப்ப முடியும் என, அம்மாநில அ.தி.மு.க. நம்பிக்கை தெரிவித்துள்ளது. 
கேரள சட்டசபைத் தேர்தலில், ஏழு தொகுதியில் அதிமுக போட்டியிடும் என கூறப்படுகிறது. பாலக்காடு, இடுக்கி மாவட்டங்களில் தலா மூன்று தொகுதிகளிலும், திருவனந்தபுரத்தில் ஒரு தொகுதியிலும் அ.தி.மு.கவுக்கு வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. இந்நிலையில், பாலக்காடு மாவட்டத்தில் சித்தூர், நெம்மாரா, மலம்புழா மற்றும் இடுக்கி மாவட்டத்தில் தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை, திருவனந்தபுரத்தில் ஒரு தொகுதியிலும் அதிமுகவுக்கு நல்ல ஆதரவு இருப்பதாக, கேரள மாநில அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.