தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வடமராட்சி கிழக்கில் பல்கலைகழக மாணவர்களின் விபரங்களை திரட்டும் சிறிலங்கா புலனாய்வாளர்கள்

images

வடமராட்சி கிழக்கில் பல்கலைகழக மாணவர்களின் பெயர் விபரங்களை சிறிலங்கா படைபுலனாய்வாளர்கள் திரட்டி வருகின்றனர்.வடமராட்சி கிழக்கின் நாகர்கோவில்,மாமுனை,செம்பியன்பற்று,மருதங்கேணி,வத்திராயன்,உடுத்துறை,ஆழியவளை,வெற்றிலைகேனி கட்டைக்காடு ஆகிய கிராமங்களில் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களின் வீடுகளிற்கு செல்லும் புலனாய்வாளர்கள் மாணவர்களின் பெயர்விபரங்கள், அவர்கள் எங்கே படிக்கிறார்கள்,எப்போது படிப்பு முடியும் போன்ற விபரங்களை திரட்டுவதுடன் அவர்களின் தொடர்பு இலக்கங்களையும் பெற்றோரிடம் கேட்டதாக பெயர் குறிப்பிட விரும்பாத ஒருவர் எம்மிடம் தெரிவித்துள்ளார், அத்துடன்  மாணவிகள் என்றாலும் பரவாயில்லை அவர்களின் தொடர்பு இலக்கங்களை தருமாறும் கேட்டுள்ளனர் . இது அந்தப்பகுதி மக்களை மிகவும் அச்சத்திற்கு இட்டுச்சென்றுள்ளது.
Comments
Loading...