தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரான்சில் இருக்கும் தமிழரை நாடுகடத்த சிறீலங்கா அரசு கோரிக்கை

நாடுகடத்த கோரும் இளைஞன்

பிரான்ஸில் இருப்பதாக கூறப்படும் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என சந்தேகிக்கும்  ஒருவரை நாடு கடத்தவேண்டும் என்று சிறீலங்கா வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

35 வயதான ஜெயநாதன் தர்மலிங்கம் என்ற இந்த சந்தேகநபர், பிரான்ஸில் சட்டவிரோதமாக தொழில்செய்து வருவதாக சிறிலங்காவின் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. பிரான்ஸில் விபத்து ஒன்றில் சிக்கிய அவர் அங்குள்ள பொலிஸில் தமக்கு தொழில் செய்ய முடியாத அளவில் உடல் நலம் குன்றியுள்ளதாக முறையிட்டுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை அன்று அவர் பாரிஸின் கிழக்கு புறநகர் பகுதி பொலிஸில் இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார். இதன்போதே ஜெயநாதன், சர்வதேச ரீதியில் பிடியாணை உத்தரவுக்கு உட்பட்டவர் என்பதை பிரான்ஸ் பொலிஸார் தெரிந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர், ஏற்கனவே சர்வதேச இன்டர்போல் பொலிஸாரால் இலங்கையில் பயங்கரவாதம் என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளார். கிளிநொச்சியை பிறப்பிடமாகக் கொண்ட ஜெயநாதன் பிரான்ஸ் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

Comments
Loading...