Designed by Iniyas LTD
லிபியாவில் நிலவிவரும் அரசியல் குழப்பத்துக்கு முடிவு
லிபியாவில் தலைநகர் திரிபோலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போட்டியாக அரசு நடத்தி வந்த பிரிவினர், சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐக்கிய அரசிடம் ஆட்சிப் பொறுப்பை செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தனர். சர்வதேச சமாதான முயற்சியின் பலனாக ஏற்பட்ட இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, லிபியாவில் நிலவிவரும் அரசியல் குழப்பத்துக்கு முடிவு கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.