Designed by Iniyas LTD
காணி சுவீகரிப்பை தடுக்க நில அளவை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம்
கடற்படைமுகாம் மற்றும் இராணுவ முகாம் அமைப்பதற்கு தனியார் காணிகளை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு செய்யும் பணியினை மேற்கொள்ள கூடாது என நில அளவை அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகின்றது.
யாழ்.திருநெல்வேலியில் உள்ள நிலஅளவை அலுவலகம் முன்பாக இன்று காலை 8.30 மணி முதல் குறித்த மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந்த போராட்டத்தின் போது நில அளவை அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் இந்த நில அளவையை முற்றாக நிறுத்தும் அதிகாரம் எமக்கு இல்லை.
ஆனால் இன்றைய தினம் உங்கள் போராட்டத்தின் மத்தியில் இன்று மேற்கொள்ளவிருந்த நில அளவை நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளோமே தவிர முற்றாக நிறுத்தவில்லை. முற்றும் முழுதாக நிறுத்தும் அதிகாரமும் எமக்கு இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.