தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆர்.கே நகரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ஸ்டாலின்

தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் நேற்று பிரசாரத்தைத் துவக்கினார்.stalin

இதற்கு என்ன காரணம் என்று பல தரப்பிலும் பல விஷயங்கள் முன் வைக்கப்படுகிறது. எனினும், சம்பந்தப்பட்ட நபரே இது குறித்து கூறினால்தானே அது சரியாக இருக்கும். சரி வாருங்கள் விஷயத்துக்குச் செல்வோம்..  அதிமுக சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடுவதுடன், தனது தேர்தல் பிரசாரத்தை சனிக்கிழமை (ஏப்ரல் 9) முதல் தொடங்க உள்ளார்.

இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் திடீரென ஆர்.கே.நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட சி.ஜி.காலனி, ஜெ.ஜெ.காலனி, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடுவீடாகச் சென்று, “சொன்னாங்களே… செஞ்சாங்களா’, “முடங்கிய அரசு, மூழ்கிய தமிழகம்’, “ஐந்தாண்டுகளாய் துருப்பிடித்துக் கிடக்கும் தமிழ்நாடு’ ஆகிய 3 தலைப்புகளில் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை ஸ்டாலின் விநியோகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் தொகுதி என்பதால் இந்த இடத்தில் பிரசாரத்தைத் தொடங்கவில்லை.

மழை வெள்ளம் வந்தபோது இந்தப் பகுதிக்கு வந்து வாகனத்தைவிட்டு கீழே இறங்காமல் பிரசாரம் செய்யும் வகையில் பேசிவிட்டு ஜெயலலிதா சென்றார். இதனை மக்களுக்கு உணர்த்தும் வகையில்தான் இந்தத் தொகுதியை முதலில் தேர்ந்தெடுத்து, துண்டு பிரசுரம் வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளேன். தமிழகம் முழுவதும் திமுகவினர் வீடுவீடாகச் சென்று துண்டு பிரசுரங்கள் வழங்க வேண்டும் என்றார்.

Comments
Loading...