தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதிய தமிழகம் கட்சிக்கு தொலைக்காட்சி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சிக்கு, தொலைக்காட்சிப் பெட்டி (டிவி) சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.puthiya-thamizhagam

இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி சின்னத்தை, கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். அப்போது பேசிய அவர்,தேர்தல் ஆணையம் எங்களுக்கு வெற்றிச் சின்னமான தொலைக்காட்சிப் பெட்டிச் சின்னத்தை ஒதுக்கியுள்ளது. திமுக தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம், நெல்லை மாவட்டத்தில் வாசுதேவநல்லூர், விருதுநகரில் ஸ்ரீவில்லிபுத்தூர், கரூர்  மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.

இந்த 4 தொகுதிகளிலும் எங்கள் வேட்பாளர்கள் தொலைக்காட்சி சின்னத்தில் போட்டியிடுவார்கள். புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட ஏராளமான தொண்டர்கள் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.  மேலும் விருப்ப மனு தாக்கல் செய்ய பலருடைய விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக 13ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வேட்பாளர் இறுதி செய்யப்பட்டு ஏப்ரல் 14ம் தேதி புதிய தமிழகம் கட்சியினரின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று கூறினார்.

Comments
Loading...