தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

குருமண்காட்டில் ரயில் மோதி ஒருவர் சாவு!

kiniya1வவுனியா குருமன்காட்டுப் பகுதியில் பயணித்த புகையிரத்தில் மோதுண்டு குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற புகையிரதம் குருமன்காடு பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை குறித்த நபர் தண்டவாளத்தில் திடீர் என ஏறி நின்றதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இதில் முல்லைத்தீவு அளம்பில் தெற்கை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செபஸ் தியாம்பிள்ளை பீற்றர் என்பவரே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் புகையிரதம் சம்பவ இடத்தில் நிறுத்தப்பட்டு இறந்தவரின் சடலம் புகையிரத்தில் ஏற்றி வவுனியா புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் புகையிரதம் யாழ்ப்பாணம் நோக்கி புறப்பட்டிருந்தது.
இதேவேளை இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ள நிலையில் சடலம் தற்போது வவுனியா பொது வைத்தியாசலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Comments
Loading...