Designed by Iniyas LTD
இலட்சியப் போர்வாள்: கொற்றவை கவிதை
ஒரு கூர்வாள்
பேரினவாத்தின்
நிகழ்ச்சி நிரலுக்குள் – இல்லை
நிகழ்ச்சி நிழலில்…
பட்டை தீட்டப்பட்டு
காட்சிப் படுத்தப்படுகிறது
முட்டி மோதப் பயந்த
எட்டப்பர் கூட்டத்தின்
கெட்டித்தன்தை
பின்னட்டையல்லவா
கொட்டிச் சொன்னது!
விடுதலை வேட்கையின்
நெஞ்சுரம் கண்டு
அஞ்சிய கரங்களால்
நஞ்சில் நனைத்து
தயார்படுத்தப்பட்டுள்ளது!
நேரடிச் சமரொன்றில்
நெஞ்சில் பாய்ச்சவல்ல
எதிர்பாராத் தருணத்தில்
முதுகில் குத்திக்கொல்லும்
முன்னேற்பாடாக…!
பகடைக்காய்களையும்
பலிக்கடாக்களையும் – எம்
இளைய தலைமுறை
இனம்கண்டு உய்த்தறிய
இதுவொரு ஆதார ஆவணம்
“முறிந்த பனைகள்“
சரிந்த நிலத்தில்தான்
விடியலின் திசைநோக்கி
எங்கள் பயணங்கள் தொடர்ந்தது!
ஒரு கூர்வாளென்ன
ஓராயிரம் கூர்வாள்கள்
தீட்டப்படும்
உருவிய எம் இலட்சியப்
போர்வாள் என்றும்
அதை வெல்லும்!
-கொற்றவை
