Designed by Iniyas LTD
அமெரிக்காவில் வீடு புகுந்து துப்பாக்கிச் சூடு! எட்டு பேர் பலி
சின்சினாட்டி நகரில் இருந்து சுமார் 80 மைல் கிழக்கேயுள்ள அப்பலச்சியன் பகுதியில் நடைபெற்ற இந்த படுகொலையின் பின்னணி தொடர்பான தகவல்கள் ஏதும் வெளிவராத நிலையில், முன்விரோதம் காரணமாக இச்சம்பவம் நடந்திருக்கலாம் என கருதும் போலீசார், ஒன்றுக்கு மேற்பட்ட கொலையாளிகள் இதில் ஈடுபட்டிருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் பிரசவித்து நான்கு நாட்களேயான ஒரு பெண்ணும் கொல்லப்பட்ட நிலையில் அவருக்கு அருகாமையில் கிடந்த குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கொலைவெறி தாக்குதலில் இருந்து தப்பிய மேலும் மூன்று குழந்தைகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.