Designed by Iniyas LTD
பிரான்சில் காரை துரத்தி பிடிக்க முற்பட்ட போது சாலையில் தொடர் விபத்து
பிரான்ஸில், சந்தேகத்திற்குரிய பிரித்தானியா நாட்டு கார் ஒன்றை அதிவேகமாக பொலிஸ் துரத்தி பிடிக்க முற்பட்டபோது சாலையில் தொடர் விபத்துகள் ஏற்பட்டுள்ளது.
பிரான்ஸ் பெல்ஜிய எல்லை அருகே உள்ள ஒரு சாலையில், சந்தேகத்திற்குரிய வகையில் இருந்த பிரித்தானியா நாட்டு பதிவு எண் கொண்ட கார் ஒன்றை பொலிசார் கண்டுள்ளனர். பின்னர், குறிப்பிட்ட காரை அதிகவேகமாக துரத்திய பொலிசார், காரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர், இந்த துரத்தலின் போது சாலையில் பயங்கர விபத்துகள் ஏற்பட்டுள்ளது. துரத்தலின் முடிவில் குறிப்பிட்ட கார் வடக்கு பிரான்சில் Dunkirk அருகே விபத்தில் சிக்கி நொறுங்கியுள்ளது. காரில் பயணம் செய்த நான்கு பேரும் படு காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
காரில் உள்ளவர்கள் ஆட்கடத்தல்காரர்கள் என பொலிசாருக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலே, பொலிசார் துப்பாக்கியால் சுட்டு குறிப்பிட்ட காரை துரத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பொலிஸ் சுட்டதில் காரில் பயணித்த இரண்டு பேர் படுகாயமடைந்துள்ளதாக வெளியான தகவலை அதிகாரிகள் எவரும் இதுவரை உறுதி செய்யவில்லை. இத்துரத்தலின் போது சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து குழப்பத்தால், ஒரு மோட்டார் சைக்கிள் ஒட்டுனர் லொறியில் மோதி இறந்துள்ளார்.