Designed by Iniyas LTD
நாகர்கோவிலில் மே 10 ஆம் திகதி பிரசாரத்தில் ஈடுபடுகிறார் ராகுல் காந்தி!
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மே 10-ஆம் தேதி நாகர்கோவிலில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப் பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் திமுகவும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் போட்டியிடுகின்றன. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்தி வருகிற 10-ஆம் தேதி நாகர்கோவில் நாகராஜா கோயில் திடலில் நடைபெறும் பிரசாரக் கூட்டத்தில் பேசுகிறார்.
இதற்காக அவர் திருவனந்தபுரத்தில் இருந்த தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நாகர்கோவில் வருகிறார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.