Designed by Iniyas LTD
மனிதவுரிமைகள் பொறிமுறைக்கு தலைமை மங்கள சமரவீர!
சிறிலங்காவில் புதிதாக உருவாக்கப்படவுள்ள மனித உரிமைகள் தொடர்பான பொறிமுறையை அமுலாக்கும் குழுவுக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவே தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்படுகிறது. வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஜுன் மாதம் அளவில் இந்த பொறிமுறையை அமுலாக்க அமைச்சரவையில் கடந்த வாரம் அங்கீரிக்கப்பட்டிருந்தது. இதன்படி 2017-2021ம் ஆண்டு வரையான காலப்பகுதிக்கு மனித உரிமை சம்மந்தமான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த குழு உருவாக்கப்படவுள்ளது. இதில் மங்கள சமரவீரவுடன், அமைச்சர்களான விஜயதாஸ ராஜபக்ஷவும், மலிக் சமரவிக்ரமவும் உள்வாங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.