தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யேமன் போலீஸ் அலுவலகத்தின் மீதி ஐ எஸ் தாக்குதல்! 37 பேர் பலி

2தென் கிழக்கு யேம­னிய துறை­முக நக­ரான முகல்­லாவில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை தற்­கொலைக் குண்­டு­தா­ரி­யொ­ருவர் நடத்­திய தாக்­கு­தலில் பொலிஸ் படை­ய­ணிக்கு புதி­தாக ஆட்­சேர்க்­கப்­பட்ட குறைந்­தது 37 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இந்தத் தாக்­கு­த­லுக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்.
கடந்த மாதம் மேற்­படி நகரை பொலிஸார் மீளக் கைப்­பற்­றி­யி­ருந்த நிலையில் அந்­ந­கரின் புற­ந­கரப் பகு­தி­யி­லி­ருந்த பொலிஸ் ஆட்­சேர்ப்பு நிலை­யத்தில் பெரு­ம­ள­வானோர் புதி­தாக பொலிஸ் படை­ய­ணியில் இணைந்து கொள்ள வரி­சை­யாக காத்­தி­ருந்த போது, அவர்கள் மத்­தியில் பிர­வே­சித்த தற்­கொலைக் குண்­டு­தாரி தனது குண்­டுகள் பொருத்­தப்­பட்­டி­ருந்த பட்­டியை வெடிக்க வைத்­த­தாக கூறப்­ப­டு­கி­றது.
புவாஹ் மாவட்­டத்தில் இடம்­பெற்ற மேற்­படி தாக்­கு­தலில் 60 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அந்தப் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­குதல் நடத்­து­வது கடந்த ஒரு வார காலப் பகு­தியில் இது இரண்­டா­வது தட­வை­யாகும். தமது தீவி­ர­வாத குழுவைச் சேர்ந்த அபு அல் – பரா அல் – அன்ஸாரி என்பவரால் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...