தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் ஓட்டு மீண்டும் எண்ணப்படும்!

201605181317470344_Rajesh-lakhani-interview-postal-votes-will-be-again-counted_SECVPFதமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

232 தொகுதிகளுக்கு நாளை காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கும். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணும் பணியில் 9621 அதிகாரிகள் செயல்படுவார்கள். ஓட்டு எண்ணும் இடத்தில் அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் செல்போனுக்கு அனுமதி இல்லை.

ஒவ்வொரு மேஜையிலும் ஒரு கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு இருக்கும். ஒவ்வொரு மேஜையிலும் நுண் பார்வையாளர் கண்காணிப்பில் இருப்பார்கள்.

5 நிமிடத்துக்கு ஒரு முறை முடிவு விவரங்கள் தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்படும்.

வேட்பாளரின் வெற்றி வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் ஓட்டுகள் மீண்டும் எண்ணப்படும்.

Comments
Loading...