தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஊடகவியலாளரை தாக்க முயன்ற பிள்ளையான்!

article_1464140721-Pillayan-12சிறையில் அடைக்கபப்ட்டுள்ள , கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தன், ஊடகவியலாளர் ஒருவரைத் தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணசபையின் உறுப்பினரான பிள்ளையான், நேற்று மாகாணசபை அமர்வில் பங்கேற்க வந்தார்.

அப்போது அவரைப் படம்பிடிக்க முயன்ற ஊடகவியலாளரை, பிள்ளையான் பாய்ந்து தாக்க முயன்றார்.

எனினும், அவரை அழைத்து வந்த காவல்துறை மற்றும் சிறைச்சாலை அதிகாரிகள், அவரைத் தடுத்து, ஊடகவியலாளரைக் காப்பாற்றினர்.

இதன்போது அங்கு குழுமியிருந்த ஊடகவியலாளர்கள், அவரைப் புகைப்படம் எடுத்தனர். சற்றுக் கோபமடைந்த அவர்,  புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களை கடுந்தொனியில், ‘நீ யார்? எந்த ஊடகம்?’ எனக்கேட்டு, கையையும் ஓங்கிவிட்டார். எனினும், பாதுகாப்புக்கு வந்திருந்த பொலிஸார் இருவரும் அவரைத் தடுத்து, சபைக்குள் அழைத்துச் சென்றுவிட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில்,  சிவநேசதுரை சந்திரகாந்தன் கருத்து தெரிவிக்கும்போது, சுவிஸில் இருந்து நடத்தப்படும் இணையத்தளத்தை, மட்டக்களப்பைச் சேர்ந்த ஒருவர் நடத்தி வருவதாகவும் இவர், தான் மாகாண சபைக்கு வரும்போது படம் எடுத்து, தம்மைத் தரக்குறைவாக எழுதி வருகின்றார் என்றார். அவ்வாறான ஓர் இணையத்தளச் செய்தியாளராக இருக்குமோ என்ற சந்தேகத்தில் பேசிவிட்டேன் என்றார்.

அத்துடன், பொலிஸ் பாதுகாப்புடன் வரும் தான், மற்றவர்களை எவ்வாறு தாக்குவது எனவும்  தெரிவித்தார். 26.4.2016 அன்று நடைபெற்ற மாதாந்த கிழக்கு மாகாண சபை அமர்வுக்கும் 4.5.2016 அன்று நடைபெற்ற விசேட கிழக்கு மாகாண சபை அமர்வுக்கும் அழைத்து வரப்பட்ட சிவநேசதுரை சந்திரகாந்தன், அதன் பின்னர் நேற்றைய தினமே அழைத்து வரப்பட்டிருந்தார்.

Comments
Loading...