Designed by Iniyas LTD
ஒரு நாள் கிரிக்கெட்டில் மே.இ தீவுகளை வீழ்த்தியது அவுஸ்த்ரேலியா!
3 நாடுகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் மேற்கிந்தியத் தீவு களில் நடைபெற்று வருகிறது.
இதன் தொடக்க போட்டி யில் மேற்கிந்தியத் தீவுகள் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தென்னாபிரிக்காவை வீழ்த்தியது. நேற்றுமுன்தினம் நடந்த 2-ஆவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 32.3 ஓவர்களில் 116 ஓட்டங்களுக்கு சுருண்டது. சார்லஸ் அதிகபட்சமாக 22 ஓட்டங்களை எடுத்தார். ஆஸி.யின் அடம் ஜம்பா, நாதன் லயன் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.
பின்னர் துடுப்பெடுத்தா டிய அவுஸ்திரேலியா 25.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 117 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வோர்னர் 55 பந்துகளில் 55 ஓட்டங்களை விளாசினார். இதில் 3 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும். இன்று நடக்கும் 3-ஆவது போட்டியில் அவுஸ்திரேலியா- மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன.