தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆர்ப்பாட்டத்தில் கைதான மாணவர்கள் சிறையில் அடைப்பு!

protest-5-450x292அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட மாணவர்கள் மூவரும் இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை பதில் நீதவான் ஜயந்த டயஸ் நாணயக்கார முன்னிலையில் இந்த மாணவர்களை நேற்று மாலை ஆஜர்படுத்தியதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவர்களும் ஒரு மாணவியுமே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

களனிப் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் மாணவர்களுக்கெதிரான அடக்குமுறைகளை நிறுத்துமாறும் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி நேற்று மாலை ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மருதானை தொழிநுட்பக் கல்லூரிக்கருகில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பட்டம் நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாது ஜனாதிபதி செயலகத்தை நோக்கி செல்ல முற்பட்ட போது, கொழும்பு செரமிக் சந்தியில், ஆர்ப்பாட்டகாரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்தாரைப் பிரயோகம் என்பன மேற்கொண்டனர்.

இதன் போது மூன்று மாணவர்கள் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...