Designed by Iniyas LTD
லண்டன் செல்லும் விமானம் ரத்து! பயணிகள் போராட்டம்
சென்னையில் இன்று அதிகாலை 5.35 மணிக்கு லண்டனில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்திற்கு பிரிட்டிஷ் ஏர்வேசுக்கு சொந்தமான பிஏ-36 என்ற பயணிகள் விமானம் புறப்பட்டுச் செல்வதாக இருந்தது. இதில் பயணம் செய்வதற்காக முன்பதிவு செய்திருந்த 156 பயணிகள், விமானத்தில் ஏறி அமர்ந்தனர்.
அப்போது, விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு இருந்தது கண்டறியப்பட்டது. கோளாறு சரி செய்ய தாமதம் ஆனதால் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
விமானம் ரத்து செய்யப்பட்ட தகவல் விமானத்தில் பயணிகள் ஏறிய பின் 5 மணி நேர தாமதமாக தெரிவிக்கப்பட்டது. இதனால், அதிருப்தி அடைந்த பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட பயணிகள் பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.