தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

படகில் தவித்த ஈழ அகதிகள் தரையிறங்க அனுமதி!

indonesia_srilanka_migration-450x300சர்வதேச கண்டனங்களை அடுத்து, இந்தோனேசியாவின் ஆச்சே மாநில அதிகாரிகள் படகில் இருந்த இலங்கை புகலிட கோரிக்கையாளர்களை இன்று தரைக்கு இறங்கி வர அனுமதித்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக படகில் இருந்த சிறுவர்கள், பெண்கள் உட்பட 44 இலங்கை அகதிகளை தரைக்கு வர ஆச்சே மாநில அதிகாரிகள் அனுமதி மறுத்து வந்தனர்.

எனினும் அகதிகள் கரைக்கு வர இன்று அனுமதித்துள்ளதுடன் அவர்கள் கரையோரம் போடப்பட்டுள்ள கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்திய கொடியுடன் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் படகு பழுதடைந்தது.

கரைக்கு வர அனுமதிக்கப்பட்ட அகதிகளை அடையாளம் காண்பதற்காக பெலிஸ் அதிகாரிகள் புகைப்படங்களை எடுத்துள்ளனர்.

அகதிகள் சென்ற படகு திருத்தியமைக்கப்பட்டுள்ளதுடன் காலநிலை சீரானதும் திருப்பி அனுப்புவதற்காக அகதிகள் சர்வதேச கடற்பரப்பிற்கு கொண்டு சென்று விடப்பட உள்ளதாக அதிகாரின் முன்னர் தெரிவித்திருந்தனர்.

படகில் வந்த அகதிகளை கரைக்கு வர அனுமதிக்குமாறு இந்தோனேசிய துணை ஜனாதிபதி ஆச்சே மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.

Comments
Loading...