Designed by Iniyas LTD
பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்ட சோமாலியா தளபதி
ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் மத்திய ஷெபெல்லி பிராந்திய பாதுகாப்பு படை தளபதி அப்திவேலி இப்ராகிம் முகமது நேற்று முன்தினம், அவரது பாதுகாவலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். மொகாதிசுவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள ஜோவார் நகரில் இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தில் மேலும் 2 பாதுகாவலர்கள் படுகாயம் அடைந்தனர். 
பாதுகாப்பு படை தளபதியை சுட்டுக்கொன்ற பாதுகாவலர், அல் ஷபாப் இயக்கத்தின் முன்னாள் போராளி என்றும், அவர் பாதுகாப்பு படைக்கு தாவி இந்த படுகொலையை நிகழ்த்தி உள்ளார் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே அப்திவேலி இப்ராகிம் முகமது படுகொலைக்கு, அல் ஷபாப் போராளிகள் பொறுப்பு ஏற்றனர். அந்த இயக்கத்தின் செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.