Designed by Iniyas LTD
சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்ட தொடக்க விழா!
சென்னையில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்ட தொடக்க விழா காணொலி காட்சியில் மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
புனே நகரில் நேற்று நடந்த விழாவில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களை ‘ஸ்மார்ட் சிட்டி’ ஆக்கும் திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றப்படுகின்றன. புனேவில் விழா நடந்த அதே நேரத்தில் காணொலி காட்சியாக பல நகரங்களில் இது நேரடியாக ஒளிப்பரப்பட்டது.
சென்னை ராஜாஜி பவனில் உள்ள தேசிய தகவலியல் மையத்தில் காணொலி காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி பங்கேற்றார்.
ஆணையாளர் டாக்டர் பி.சந்தரமோகன், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர், மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை இணைச்செயலாளர் பி.ஆனந்த், கூடுதல் காவல்துறை ஆணையர் (தெற்கு) கே.சங்கர், பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர்கள் டி.ஜி. வினய், கே.எஸ்.கந்தசாமி, வட்டார துணை ஆணையர்கள் பிரவீண் பி.நாயர், டாக்டர் சுபோத்குமார், அண்ணாதுரை ஆகியோரும் பங்கேற்றனர். புனேவில் நடந்த நிகழ்ச்சியை கடைசி வரை அவர்கள் காணொலி காட்சியாக பார்வையிட்டனர்.