Designed by Iniyas LTD
மல்லாவியில் மாணவிகள் மீது ஆசிரியர் பாலியல் இம்சை?
பாடசாலை மாணவிகள் மீதான பாலியல் இம்சைகளில் ஈடுபட்டதாக, மல்லாவியின் கல்லூரி ஆசிரியரும் அகப்பட்டு வலய ரீதியில் இடம்பெற்ற விசாரணையில் உண்மையென கண்டுகொள்ளப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
மல்லாவி மத்திய கல்லூரியில் உயர்தரம் கல்வி கற்கும் மாணவி ஒருவர் பாடசாலையின் விடுதியில் தங்கியிருந்தே கல்வி கற்றுவருகின்றார். யாழ் வட்டுக்கோட்டைப்பகுதியில் இருந்து சென்றுவரும் ஆசிரியர் ஒருவரும் ஆசிரியர் விடுதியில் தங்கியுள்ளார்.
இதனால் குறித்த மாணவியை கடந்த மூன்று மாதமாக தொடர்ந்தும் பாலியலுக்கு நிர்ப்பந்தித்து வந்துள்ளார். இருப்பினும் அச்சத்தின் காரணமாக மாணவி வெளியில் சொல்லவில்லை. இருப்பினும் கடந்த வாரம் நிர்ப்பந்தித்தும் மாணவி இணங்காத சந்தர்ப்பத்தில் கட்டாயப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மாணவி அதிபருக்கு எழுத்தில் முறையிட்டுள்ளார். அதிபர் கோட்டம் ஊடாக வலயத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். வலயக் கல்விப் பணிப்பாளர் மாகாணத் திணைக்களம் செயலாளர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இதன் பிரகாரம் உடனடியாக ஓர் குழு அமைக்கப்பட்டு ஆரம்ப விசாரணைகள் கடந்த திங்கட் கிழமை முதல் மேற் ள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
குறித்த ஆசிரியரை கோட்டத்தின் கண்காணிப்பில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆரம்ப விசாரணையின் அறிக்கை இன்றைய தினம் ( நேற்று ) மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் பிரகாரம் சட்ட நடவக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
இதேவேளை குறித்த பாடசாலையும் கோட்டமும் ஒன்றாகவே இயங்குவதனால் எவ்வாறு நீதியாக அமையும் என மீண்டும் கேட்டபோது கோட்டம் துணுக்காய் என்பதனால் அந்த முடிவினை உடன் அறிவித்தேன் நான் வலயத்திற்கு புதிதாக சென்று 10 நாள்தான் என்பதனால் உடன் தெரியவில்லை.
இருப்பினும் நாளைய தினம் மேற்கொள்ளப்படும் சட்ட நடவடிக்கையினை அடுத்து இதற்கு தீர்வு கிட்டும் என்றார்.