தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சர்வதேசத்துடனான உடன்படிக்கையை ஸ்ரீலங்கா ஒருபோதும் மீறக்கூடாது! ஐ நா

un-security-councilசர்வதேசத்துடனான உடன்படிக்கையை சிறிலங்கா மீறக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுசெயலாளர் பான் கீ மூனின் பேச்சாளர் ஸ்ரெபன் டுஜாரிக் இதனை நியுயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகளின் தலைமையகத்தில் வைத்து கூறியள்ளார்.
பொறுப்புக்கூறும் விடயத்தில் இருந்து சிறிலங்கா பின்வாங்கக்கூடாது.
இந்த விடயத்தில் சிறிலங்காவுக்கும், சர்வதேசத் தரப்புக்கும் இடையில் உடன்படிக்கைகள் உள்ளன.
இதனை சிறிலங்கா மீறக்கூடாது.
எனவே சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நீதிபதிகளை இணைக்க முடியாது என்று சிறிலங்காவின் ஜனாதிபதி கூறிவருகின்றமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

Comments
Loading...