தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஸ்ரீ இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து காணிகளை விடுவிக்கக்கோரி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்!

காணிப்பிரச்சனையில் அரசியல் நாடகம் வேண்டாம் என கோரி ஜனநாயகத்திற்கான வடக்கு இளைஞர்களால் வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை வவுனியாவில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்
வாய்களை கறுப்பு நிற துணிகளால் கட்டியவாறு ஊர்வலமாக வந்த இளைஞர் யுவதிகள் வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவம் மக்களின் காணிகளை அபகரித்துள்ளமையினால் வட பகுதி மக்கள் பல்வேறு துன்பங்களை அனுபவிப்பதுடன், முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் வாழ வேண்டிய துர்ப்பாக்கி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
போருக்கு பின்னர் மக்களுடைய காணிகள் மக்களுக்கு வழங்கப்படுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமும் தெரிவித்த போதிலும் தமது காணிகள் வழங்கப்படாமையினால் தாம் வீதிகளில் இறங்கி போராடவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

Comments
Loading...