Designed by Iniyas LTD
ஈராக்கில் தற்கொலைத்தாக்குதல்! 12 பேர் பலி
ஈராக்கின் தலைநகரான பாக்தாத் நகரின் வடக்கு பகுதியில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
வடக்கு பகுதியில் ஒரு நுழைவு வாயிலில் இன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை வெடிகுண்டு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்தனர். சியட்டி மாவட்டத்தில் உள்ள கதிமியாவில் ஒரு நுழைவாயிலில் இன்று காலை ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டிக்கொண்டு வந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளான். இதில், 8 ராணுவ வீரர்கள், 2 காவலர்கள் உள்பட 12 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
எந்த தீவிரவாத அமைப்புகளும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை. எனினும், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.