Designed by Iniyas LTD
ஒரு வயது மகனை சுட்டுகொன்ற தந்தை!
அமெரிக்காவில் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இந்த நிலையில் ஒரு வயது குழந்தையை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
அமெரிக்காவில் எதற்கெடுத்தாலும் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் சம்பவங்கள் அதிகம் நடக்கிறது. இந்த நிலையில் ஒரு வயது குழந்தையை தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள டேனியா பீச் என்ற இடத்தை சேர்ந்தவர் திமோதிகோலி. இவர் தனது மனைவி மற்றும் 7 வயது மகன், ஒரு வயது பெண் குழந்தை ஆகியோருடன் கடற்கரைக்கு சென்றிருந்தார்.
அப்போது கணவன் – மனைவி இடையே திடீர் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த திமோதிகோலி துப்பாக்கியை எடுத்து தனது 2 குழந்தைகளையும் சுட்டார். இதில் அவர்கள் இருவர் மீதும் குண்டு பாய்ந்தது. பெண் குழந்தை அந்த இடத்திலேயே உயிரிழந்தது. சிறுவனுக்கு காயம் மட்டும் ஏற்பட்டது. பின்னர் திமோதிகோலி துப்பாக்கியால் தன்னை நோக்கி சுட்டார். இதில் அவரும் உயிரிழந்தார். காயமடைந்த சிறுவன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறான்.