Designed by Iniyas LTD
அவுஸ்ரேலிய தமிழ் புகலிடவாசிகள் குடிசன மதிப்பீட்டில் தம்மை தமிழீழ பிரஜைகளாக அடையாளப்படுத்தலாம்!
செண்பகம் நிருபர். அவுஸ்திரேலிய புகலிடவாசிகள் மற்றும் அந்நாட்டில் குடியேறிய தமிழர்கள், அந்நாட்டு அரசாங்கம் மேற்கொள்ளும் குடிசன மதிப்பீட்டில் தம்மை தமிழீழப் பிரஜைகளாக அடையாளப்படுத்தலாம் என்று அந்நாட்டு குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய நாடு எதிர்வரும் ஒன்பதாம் திகதி குடிசன மதிப்பீட்டை நடத்தவுள்ளது. குடிசன மதிப்பீட்டிற்கான விண்ணப்பப் படிவத்தில் சில நாடுகளின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடும் வாய்ப்பும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அஙகு வசிக்கும் ஈழத் தமிழர்கள் தம்மை தமிழீழ நாட்டுப் பிரஜைகளாக அடையாளப்படுத்துவது தொடர்பில் உரையாடல்களை மேற்கொண்டுள்ளனனர்.
இந்த நிலையில் இலங்கையின் உப நாடாக தமிழீழம் என்ற நாட்டை கருதுவதாக தெரிவித்துள்ள அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீட்டுத் திணைக்களம் அதில் இலங்கையிலிருந்து புகலிடம் தேடி வந்த தமிழர்கள் தமிழீழ பிரஜைகளாக தம்மை
குறிப்பிட முடியும் என்றும் தெரிவித்துள்ளது.
