Designed by Iniyas LTD
வட-கிழக்கில் இராணுவம் குறைக்கப்பட்டு மக்கள் மீள்குடியமர்த்தப்பட வேண்டும்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் உள்ள இராணுவம் குறைக்கப்பட்டு இடம்பெயர்ந்து அகதி வாழ்க்கை வாழும் மக்கள் தமது சொந்த இடங்களில் குடியமர அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு நிலையான சமாதானம் தொடர்பில் உரையாற்றும் போதே இதனைத் தெரிவித்திருந்தார்.
தொடர்புடைய பதிவு
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில் ‘இன, மத, அரசியல் கருத்துகள், உட்பட்ட வேறுபாடுகளைக் களைந்து இன நல்லிணக்கத்தையும், மனித உரிமையின் மதிப்பினையும் ஏற்படுத்துவதற்கு இலங்கையர் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் மலர்ந்துள்ளது.
யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்கள் அவர்களின் சொந்த நிலங்களுக்குச் செல்ல வேண்டும். மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அர்ப்பணிப்புடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆகவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் குடிகொண்டுள்ள இராணுவம் குறைக்கப்பட்டு மக்களின் மீள்குடியேற்றம் நடைபெறவேண்டும். இத்தகைய செயற்பாடுகளே மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியேழுப்பும்’ எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.