தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டென்மார்க்கில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2016! 

_dsc3794தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் நினைவாக 6 ஆவது ஆண்டாக நடாத்தப்பட்டதேசத்தின் குயில்கள் எழுச்சி பாடல் போட்டியானது Vejle  நகரல் நடைபெற்றது.
பொதுச்சுடரேற்றும் நிகழ்வை தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி ஏற்றப்பட்டு லெப் கேணல். திலீபன் கேணல் சங்கர் மற்றும் கேணல். ராயு ஆகிய மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர்ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்கள்.
தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டிநிகழ்வில் எல்லோரும் மிகவும் உணர்வுபூர்வமாக தாயக உணர்வுடன்பாடல்களை வழங்கியிருந்தார்கள் அரங்கத்தில் நிறைந்திருந்த மக்களின் மனங்களை தாயகப்பாடல்களால் கவர்துள்ளதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. தேசத்தின் இளங்குயில்கள் போட்டியாளர்களும் உற்சாகத்துடனும் தாயகவேட்கையுடன் தங்கள் மனதில் உள்ள ஆதங்கத்தழுச்சிப்பாடல்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தனர்.

_dsc3874

தேசத்தின் குயில்கள் (18 வயதுக்கு மேற்பட்டோர்) எழுச்சிப்பாடல்கள் மூலம் தாயக அவலங்களையும் மாவீரர்களின்தியாகங்களையும் தேசியத்தலைவரின் இலட்சியத்தையும் வெளிக்காட்டினார்கள்.
தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல்போட்டியில் பங்கு பற்றிய அனைவரும் பாடல்களை மட்டும் போட்டியாகப் பாடவில்லை தமிழீழ விடுதலையின்முக்கியத்துவம் மாவீரர்களின் இலட்சியம் மற்றும் தமிழீழம் நிச்சயம் ஒருநாள் அமையும் அதற்கு தமிழரின் ஒற்றுமையின்அவசியம் போன்ற விடயங்களையும் வெளிப்படுத்தினார்கள்.
பிரான்ஸ் நாட்டிலில் இருந்து வருகை தந்த இசைக் கலைஞர்கள் எழுச்சிப்பாடல்களுக்கான இசையை வழங்கி பாடகர்களை உற்சாகப்படுத்தினார்கள். தேசத்தின் குயில்கள் 2016 ற்கு நடுவரா கடமையாற்ற திரு. ரமணன் வஸ்தியாம்பிள்ளை மற்றும் லோகேஸ்வரன் தில்லைராசா அவர்கள் பரிஸில் இருந்து வருகை தந்து கடமையாற்றினார்கள்.
தேசத்தின் குயில்கள் எழுச்சிப்பாடல் போட்டியில் பங்குகொண்ட டென்மார்க்கில் பிறந்த மழலைகள் மற்றும் இளையோர்களின் பாட்டுத்திறன் தமிழ்மொழியை உச்சரிக்கும் திறன் போன்ற விடயங்கள் நடுவர்களை வியக்கவைத்தது என கூறினார்கள்.
தேசத்தின் குயில்கள் மழலைகளுக்கான போட்டியில் வெற்றிபெற்றவர்கள்
1ம் இடம் – செரின் அமொண்டா கிறிஸ்ரி
2ம் இடம் – அக்சனா வாமதேவன்
3ம் இடம் – சாருஐன் தர்மசேகரம்
தேசத்தின் இளங்குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள்
1ம் இடம் – விதுசன் சிவகுமார்
2ம் இடம் – மீனுசா கதிர்காமநாதன்
3ம் இடம் – றிசானா தர்மசேகரன், மெனிசா
மரியபெனாண்டோ
தேசத்தின் குயில்கள் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் 1ம் இடம் – மீனுசா கதிர்காமநாதன்
2ம் இடம் – சாரங்கா இராஐலிங்கம்
3ம் இடம் 1 அருண்ணியா இராஐசிங்கம்
தேசத்தின் குயில்கள் 2016 இல் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கும் வெற்றி பெற்றவர்களுக்கும் நினைவுச்சின்னங்களும், கேடயங்களும் வழங்கப்பட்டு தேசத்தின் குயில்கள் 2016 எழுச்சிப்பாடல்போட்டி நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற பாடலுடன் நிறைவு பெற்றது.

_dsc4058

_dsc3975

_dsc3874

Comments
Loading...