தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

காவிரி விவகாரத்தால் தமிழக கர்நாடக போக்குவரத்து சேவை 12ஆவது நாளாக பாதிப்பு

காவிரி விவகாரத்தால் தமிழக கர்நாடக எல்லையில் 12-வது நாளாக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்துகள் ஓசூர் ஜூஜூவாடி வரையிலும், கர்நாடக மாநில அரசு பேருந்துகள் அத்திப்பள்ளி வரையிலும் இயக்கப்படுகின்றன.bus

இதனால் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், மருத்துவமனைகளுக்கு செல்லும் நோயாளிகள் என பல தரப்பட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Comments
Loading...