தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சிலாபத்தில் வர்த்தகர் சுவாசம் நிறுத்தப்பட்டு கொலை!

article_1475493246-1சிலாபம் பிரதேசத்தில் இன்று (3) காலை வர்த்தகர் ஒருவர் தனது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வர்த்தகரின் சுவாசம் நிறுத்தப்பட்டு கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத 4 நபர்கள் இந்த கொலையை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையிலே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் 44 வயதானவர் என்பதுடன் இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...