Designed by Iniyas LTD
டாக்கா ஓட்டலில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் 11 பேர் சுட்டுக்கொலை!
வங்காளதேசத்தின் டாக்கா நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதில், 22 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் வெளிநாட்டவர்கள்.உள்நாட்டு தீவிரவாத குழுக்கள் இந்த தாக்குதலை நடத்தியிருக்க கூடும் என அரசு குற்றம் சாட்டியது. ஆனால் பாதுகாப்பு நிபுணர்கள், தாக்குதல் நடந்துள்ள விதம் தேசிய அளவிலான இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினரின் தாக்குதலாக இருக்க வேண்டும் என்று கூறினர்.
இதனை தொடர்ந்து போலீசார் சந்தேகத்திற்குரிய வகையிலான 24க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டு கொன்றனர்.
தொடர்புடைய பதிவு
இந்நிலையில், டாக்கா ஓட்டல் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என குற்றம் சாட்டப்படும் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பினை சேர்ந்த 11 உறுப்பினர்களை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றுள்ளனர்.
டாக்கா புறநகர்ப் பகுதிகளில் 3 இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையின்போது இவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக உள்துறை மந்திரி அசாதுஜாமன் கான் தெரிவித்தார்.
தீவிரவாதிகளை சரண் அடையும்படி கூறியும் அவர்கள் சரணடையாமல் துப்பாக்கியால் சுட்டதால் பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்து அவர்களை சுட்டுக் கொன்றதாகவும் அவர் கூறினார்.
சுட்டுக்கொல்லப்பட்ட அனைவரும் ஜமாத்-உல்-முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.