Designed by Iniyas LTD
ஏமாற்று வித்தையில் சிங்கள அரசு
ஜெனீவாவில் தப்பித்துக்கொள்ள 20 நிமிடக் காணொளியைத் தயாரிக்கிறது மகிந்த அரசாங்கம்!! சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ஆதாரக் காணொளிக்குப் பதிலாக 20 நிமிட ஆவணக் காணொளியைச் சிறீலங்கா அரசாங்கம் தயாரித்து வருகின்றது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெறவுள்ள மனித உரிமை மாநாட்டில் சிறீலங்கா அரசாங்கம் மீதுள்ள நெருக்கடி நிலைமையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது.
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின்போது காணாமல் போன அல்லது கொலை செய்யப்பட்ட பிள்ளைகளின் பெற்றோரை வைத்தே இக்காணொளி தயாரிக்கப்படுகின்றது. அத்துடன் போருக்குப் பின்னரான அமைதி நிலை குறித்தும் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளதாம். தற்போது இக்காணொளி தயாரிப்பு வேலைகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
உறவுகளை பறி கொடுத்த ஈழ உறவுகளின் சம்மதமின்றி சிறீலங்கா அரசின் மிரட்டலின் அடிப்படையில் பெறப்பட்ட பதிவு என்பதற்கும் அப்பால் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னால் அரசியற்துறைப் பெறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களின் மனைவியின் வாய் அசைவிற்கு அவரின் குரலை உடைய ஒருவரின் குரல் பயன் படுத்தப்பட்டுள்ளதாகவும் இவ் ஒலிப்பதிவுகள் திட்டமிட்டு சிறீலங்கா அரசால் புனையப்படும் புனை கதை எனவும் கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐந்தறிவு மிருகங்களே தங்களை அழித்தவர்களை எதிரியாக நினைத்து அழிக்க முற்படும் போது தமிழீழமே உயிர் மூச்சாக நினைத்தவர்கள் தங்களது உறவுகளை கொன்று குவித்தவர்கள் நல்லவர்கள் என்று கூறுவார்களா? மங்குணி அரசு என்பதை மணிக்கொரு தடவை நிரூபிக்கின்றது சிங்கள அரசு