Designed by Iniyas LTD
லண்டனில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தூதரகத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் முற்றுகை போராட்டம்!
கடந்த வியாழன் (20/10/16 ) அன்று தாயகத்தில் திட்டமிட்ட முறையில் சிறீலங்கா பொலீசாரால் சுட்டு கொல்லபட்ட இரு யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் இழப்பிற்கு நீதி கோரும் முகமாக, இலண்டனில் அமைந்துள்ள சிறீலங்க தூதராலயத்திற்கு முன்பாக மாபெரும் மக்கள் முற்றுகை போராட்டம் ஒன்றினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இளையோர் அமைச்சு, இன்று செவ்வாய் (25/10/16 ) காலை 11 மணி தொடக்கம் மாலை 4மணி வரை நடத்தியுள்ளனர்.
இந்த முற்றுகைப்போராட்டத்தில் பெருமளவான புலம்பெயர் உறவுகள் கலந்து கொண்டனர்.




