தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தென்னைமரவாடி கலவரத்தின் 32ஆண்டு – அகலா வடுக்கள்!

15350601_10154443813228801_6442237919347377693_n

தமிழ் மக்களை இலங்கைத்தீவிலிருந்து ஒழிப்பதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செய்து கொண்டேயிருக்கிறது. கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் எதனையும் செய்துகொடுக்காமல் புறக்கணித்தால் அந்தக் கிராமங்களை விட்டு மக்கள் வேறு எங்காவது இடம்பெயர்ந்து செல்லுவார்கள் என்று அரசாங்கம் நினைக்கின்றது. மக்களை இடம்பெயரச் செய்யவும் நிலத்தை அபகரிக்கவும் இதுவும் ஒரு உபாயமாக கையாளப்படுகின்றது. ஏனெனில் மக்கள் தமது வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுவதற்காகவும் ஒரு இடத்தை விட்டு இன்னொரு இடத்திற்கு நகர்கின்றார்கள். அடிப்படை வசதிகள் ஏதுவும் இல்லாத ஒரு கிராமமாககவும் நில அபகரிப்புக்கு முகம் கொடுக்கும் கிராமமாகவும் பெருந்துயரத்திற்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம்.

திருகோணமலை மாவட்டத்தில் குச்சவெளிப் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது தென்னைமரவாடிக்கிராமம். கிழக்கு மாகாணமும் வடக்கு மாகாணமும் இணையும் இடத்தில் உள்ள இந்தக் கிராமத்தின் மறுபுறத்தில் கொக்கிளாய் காணப்படுகிறது. கொக்கிளாய் நீரேரியும் பறையானாறும் வடக்கையும் கிழக்கையும் இணைக்கின்றன. இவைகளின் கரையோரமாக தென்னைமரவாடிக்கிராமம் இருக்கின்றது. தென்னவன் என்ற தமிழ் அரசன் இந்தக் கிராமத்தை ஆண்டதினால் தென்னவன் மரபு வந்த அடி என்பதனால் தென்னைமரவாடி என்ற பெயர் இந்தக் கிராமத்திற்கு ஏற்பட்டிருக்கிறது. காலம் காலமாக இந்தக் கிராமத்தில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். இதுநீண்ட நெடிய வரலாறு கொண்ட ஒரு ப+ர்வீகக் கிராமம்.

முன்னொரு காலத்தில் மக்கள் மகிழ்வும் வளமும் கொண்டதொரு %

Comments
Loading...