தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் இரு சகோதரிகள் குளத்தில் மூழ்கி பலியான சோகம்!

picture-015-300x225கிளிநொச்சி – ஆனைவிழுந்தான் குளத்தில் நீராடச்சென்ற இரண்டு பெண்கள் இன்று(07) மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

குறித்த பெண்கள் ஆனைவிழுந்தான் கிராமத்தை சேர்ந்த இரு சகோதரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீராடச்சென்ற போது ஆனைவிழுந்தான் குளத்தில் சேற்றில் புதையுண்டு உயிரிழந்துள்ளாதாகவும் இதில் ஒருவர் அண்மையில் திருமணம் ஆனவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சகோதரிகளின் சடலங்கள் தற்போது கிளிநொச்சி அக்கராயன் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments
Loading...