Designed by Iniyas LTD
பனிக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட காரணம் என்ன!
இத்தகைய வறட்சியைப் பொக்குவதற்கு பலர் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், கிரீம்களை பூசிக்கொள்ளலாம். சரும வறட்சிக்கு புறக்காரணிகள் காரணமாக இருந்தாலும், சிலருக்கு பரம்பரைக் காரணங்களாலும் சரும வறட்சி ஏற்படுகிறது.இத்தகைய வறட்சியடைந்த சருமத்தை உடனுக்குடன் சரிசெய்து கொள்ள வேண்டும். இல்லையெனில், பல பாக்டீரியாக்கள் வறண்ட சருமத்தின் வழியே ஊடுருவி சரும அழற்சியை ஏற்படுத்தும்.
சரும வறட்சி பெரும்பாலும் உலர்ந்த காற்றினால் முக்கியமாக ஏசி அறைகளில் மணிக்கணக்கில் அமர்ந்திருந்தால் சருமம் வறட்சியடையும். மேலும் சரும வறட்சியானது மிகக்குறைந்த வெப்பநிலை, மிகக்குறைந்த ஈரப்பதம் மற்றும் பயங்கரமாக அல்லது மிக வேகமாக அடிக்கும் காற்று போன்றவற்றாலும் ஏற்படும்.