தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர்களுக்கான அரசியல் தீர்வு கேள்விக்குறியான நிலையில்! இந்தியன் எக்ஸ்பிரஸ்

genocide-930-copyபுதிய அரசமைப்பு உருவாக்க முயற்சி பாரிய முட்டுக்கட்டை நிலையை எதிர்கொண்டுள்ளதாக  இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்து ள்ளது.
பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ள புதிய அரசியல் அமைப்பு உருவாக்க முயற்சிகள் பாரிய முட்டுக்கட்டை நிலையை சந்தித்துள்ளதாக அந்தப் பத்திரிகை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் கருத்தறியும் குழுவினர் நாடாளாவிய ரீதியில் மேற்கொண்ட கருத்து திரட்டலை கைவிட்டு விட்டு புதிய அரசமைப்பின் வடிவம் தொடர்பில் பொதுமக்களிடம் மீண்டும் ஆலோசனைகளைப் பெறப்போவதாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த மதத்தின் உயர் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
2016ஆம் ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு சாத்தியமாகும் என்ற இலங்கை அரசின் வாக்குறுதிகள் நிறைவேறாத அதேவேளை இந்த வாக்குறுதிகள் எதிர்காலத்தில் பூர்த்தியாவதற்கான வாய்ப்புகளும் குறைவாகக்  காணப்படுகின்றன.
கடந்த ஞாயிற்றுகிழமை பௌத்த மதத்தின் முக்கிய தலைவர்களைச்  சந்தித்த ஜனாதிபதி புதியஅரசமைப்பில் எந்தவகையான பிரிவினைக்கும் தான் இடமளிக்கப்போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் அரசமைப்பு ஒற்றையாட்சி முறையையே கொண்டிருக்கும், சமஷ்டிக்கு வாய்ப்பில்லை என்பதை தெரிவித்துள்ள ஜனாதிபதி, வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது மற்றும் பௌத்தத்தின் முதன்மை நிலை தொடரும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
புதிய அரசமைப்பு பௌத்த மதகுருமாருடன் கலந்தாலோசிக்கப்பட்ட பின்னரே உருவாக்கப்படும். பொதுமக்களிடம் மீண்டும் புதிய அரசமைப்பு குறித்து கருத்துக் கோரப் போகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக நாடு முழுவதும் கடும் சிரமத்தின் மத்தியில் பொதுமக்கள் கருத்தறியும் குழு தயாரித்த அறிக்கை புதிய அறிக்கைக்காக கைவிடப்படலாம். குறிப்பிட்ட குழு இலங்கை அரசமைப்பின் வடிவம் எவ்வாறானதாகயிருக்க வேண்டும் எனத் தெரிவிக்காவிட்டாலும் அது சில ஆரம்பகட்ட பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மாகாண ஆளுநர்களின் அதிகாரத்தைக் குறைக்கவேண்டும், மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரத்தை வழங்கவேண்டும் என அது கோரியுள்ளது.
இந்தப் பரிந்துரைகள் சிங்கள பெரும்பான்மை சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர்கள் இதனைப் பிரிவி னையாகக் கருதுகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதியால் வழிநடத்தப்படுகின்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி ஆகியன புதிய அரச மைப்பை உருவாக்கும் முயற்சியை எதிர்த்து வருகின்றன. அதற்கு எதிராக வெற்றிகரமான பிரசாரத்தையும் முன்னெடுத்துள்ளன.
இதன் பின்னணியிலேயே ஜனாதிபதி மைத்திரிபாலவின் சமீபத்தைய கருத்தை நோக்கவேண்டியுள்ளது என அந்தப் பத்திரிகையில் மேலும்  தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Loading...