தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விழுப்புரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை!

201701071559314659_midnight-worker-killed-escape-employee-villupuram_secvpfவிழுப்புரம் அருகே உள்ள சென்னமாதேவி காலனி மேட்டுத்தெருவை சேர்ந்தவர் நாகப்பன்(வயது 52). தொழிலாளி. இவரது மனைவி பூங்காவனம்(45). இவர்களுக்கு 4 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நாகப்பனுக்கு குடிப்பழக்கம் உண்டு. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வார். நேற்று இரவு 9 மணிக்கு நாகப்பன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் கோபம் அடைந்த பூங்காவனம் அந்த பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் வீட்டின்முன் நாகப்பன் கட்டிலில் படுத்திருந்தார். இன்று காலை பூங்காவனம் தனது உறவினர் வீட்டில் இருந்து தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கட்டிலில் நாகப்பன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நாகப்பனின் கழுத்தில் வெட்டுகாயங்கள் காணப்பட்டன. அவரை வெட்டி கொலை செய்திருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் மகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் மருது மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். நாகப்பன் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

நாகப்பன் கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது நாகப்பனுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த விவசாயிக்கும் தகராறு இருந்தது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவத்துக்கு பிறகு அந்த விவசாயியை காணவில்லை. மாயமான விவசாயி மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவரை தேடி வருகின்றனர்.

கொலைசெய்யப்பட்ட நாகப்பனின் மகள் கனகவல்லிக்கு திருமணம் ஆகி விட்டது. அவர் பெங்களூரில் வசித்து வருகிறார். மகள்கள் காந்திமதி, பூங்கொடி, சிவகலை, மகன் லட்சுமிசுந்தரம் ஆகியோர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

Comments
Loading...