Designed by Iniyas LTD
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் நாங்கள் கலந்துரையாடுவோம்- ததேகூ அழைப்பு விடுக்கும் பஷில்
தமிழ்க் கூட்டமைப்பினர் பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு வந்தால் மட்டுமே இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களோ அல்லது எவ்வாறான அதிகாரங்கள் குறித்தும் கலந்துரையாட முடியும். எனவே தெரிவுக்குழுவுக்கு வாருங்கள் நாங்கள் கலந்துரையாடுவோம் என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
எனினும் முன் நிபந்தனை விதிக்காமல் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு தமிழ்க் கூட்டமைப்பு வரவேண்டும். முன்நிபந்தனைகளின் விதிப்பானது சிக்கலை ஏற்படுத்திவிடும். எனவே முன்நிபந்தனை விதிக்காமல் கூட்டமைப்பு தெரிவுக்குழுவுக்கு வரவேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் மாநிலங்களுக்கு வழங்கியுள்ள அதிகாரங்களை கூட்டமைப்பு கோருகின்றது. ஏனைய கட்சிகள் வேறுவிதமான யோசனையை முன்வைக்கின்றன. அனைத்து விடயங்கள் குறித்தும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவிலேயே பேச முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தியாவில் உள்ள மாநிலங்களுக்கு எவ்வாறான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதோ அது போன்ற அதிகாரங்களையே இலங்கையிலும் எதிர்பார்க்கிறோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவில் தெரிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சென்னை அடையாறில் உள்ள இந்திய தெற்காசிய ஆய்வு மையத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சியில் இலங்கையின் இன்றைய போக்கு’ என்ற தலைப்பில் உரையாற்றிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் வட கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களுக்கு உரிமை அளிக்கும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த இந்தியா முயற்சி மேற்கொண்டது. ஆனால்இ இலங்கை அரசாங்கம் அந்தச் சட்டத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவில்லை என்றும் இரா. சம்மந்தன் குறிப்பிட்டுள்ளார்.