Designed by Iniyas LTD
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை- அருண் ஜெட்லி
வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை எனவும் ரூ. 2.5 முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு 5 சதவீதம் வரி மட்டுமே என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:
* அரசியல் கட்சிகள் நிதி பெறுவதில் வெளிப்படை தன்மை தேவை
* அரசியல் கட்சிகள் இனி ஒருவரிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மட்டுமே ரொக்கமாக பெற முடியும் ( இதற்கு முன் ரூ.20 ஆயிரம் வரை இருந்தது)
* ரொக்கமாக ரூ. 3 லட்சத்துக்கு மேல் வங்கிகளில் பணம் எடுக்க தடை
* ஆண்டுக்கு 50 கோடிக்கு குறைவாக வர்த்தகம் நடைபெறும் சிறு நிறுவனங்களுக்கு 5 சதவீத வரி குறைப்பு
* 6.94 லட்சம் நிறுவனங்கள் வருமான வரி செலுத்துகின்றன. இதில் 96 சதவீத நிறுவனங்கள் சிறு நிறுவனங்கள்தான்
* ஊழலுக்கு எதிரான சிறப்பு விசாரணை குழு இப்பரிந்துரையை செய்தது. இந்த பரிந்துரையை அரசு ஏற்கிறது; இதற்காக வருமான வரி சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்
* 2015-16ல் மொத்த வரி வருவாய் 17 சதவீதம் அதிகரித்துள்ளது
* வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் இல்லை
* மரூ. 2.5 முதல் ரூ. 5 லட்சம் வரை வருமானம் உள்ளோருக்கு 5 சதவீதம் வரி மட்டுமே என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.