Designed by Iniyas LTD
10 தமிழக மீனவர்கள் ஸ்ரீ கடற்படையால் கைது!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 10 தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை உதவிப்பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் நேற்று (புதன்கிழமை) இரவு 2 படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டபோது காங்கேசன்துறையில் வைத்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர்களை யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ள நிலையில், அவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன