Designed by Iniyas LTD
போராடி நிலம் மீட்ட மக்களைக் கைவிட்ட தமிழ் அரசியல் வாதிகள்?
முல்லைத்தீவு, கேப்பாப்புலவு பிலக்குடியிருப்பைச் சேர்ந்த மக்களுடைய காணிகள், கடந்த 1 ஆம் திகதி விடுவிக்கப்பட்ட நிலையில்,அவர்கள் மீள்குடியேறுவதற்கான அடிப்படை வசதிகள் எவையும் செய்து கொடுக்கப்படவில்லை என மக்கள்கவலை வெளியிட்டுள்ளனர்
கடந்த ஜனவரி 31 ஆம் திகதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்நிலையில், அவர்களுடைய காணிகள் கடந்த 1 ஆம் திகதி விடுவிக்கப்பட்டது
விடுவிக்கபட்டு தாம் கணிக்குள் சென்ற அன்றிலிருந்து மழை பெய்கிறது ஒரு கொட்டில் போட கூட வசதிகள் இல்லையெனவும் தாம் மழையில் நனைந்து திரிவதாகவும் தமக்கு தற்காலிக கூடாரங்களை அமைத்து அடிப்படை வசதிகளை ஏற்ப்படுத்தி தருமாறும் கோருகின்றனர்.




