Designed by Iniyas LTD
டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி ஆதரவு
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தேசிய தென்னக நதிகள் இணைப்பு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த விவசாயிகளின் அரை நிர்வாணமாக 14-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் தங்கள் வாய்களில் உயிருள்ள எலிகளை கவ்விப் பிடித்து நூதனமான முறையில் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கும் வகையில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்து உள்ளது.
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் டெல்லி மாநில ஆளும் கட்சியான ஆம் ஆத்மியும் ஆதரவு தெரிவித்து உள்ளது. டெல்லி மாநில எம்.எல்.ஏ. சோம்நாத் பார்தி நாளை விவசாயிகளை சந்தித்து பேசுகிறார்.